ண்டிகர்

டுமையான குளிரால் பஞ்சாப் பள்ளிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. மக்கள் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்ளச் சாலைகளில் தீ மூட்டிக் குளிர் காய்ந்து வருகின்றனர்.

பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் ஐந்தாம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.