சென்னை

ன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பகல் முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.   நேற்று அலுவலகத்தில் இருந்து திரும்பிய பலரும் நேரத்துக்கு வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.  சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்குச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்க விடுத்திருந்தது.  அது சிவப்பு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.  நகரில் பல இடங்களில் மழை நீர் அகற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுமுறை அறிவித்துள்ளார்.  இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை இயங்காது.   அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.