ராஞ்சி: ஜார்க்கண்டில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மார்ச் 28ம் தேதி ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் இன்று அதிகபட்சமாக 278 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,175 பேர் இன்னமும்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் ஒன்று கூடி ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக டெல்லி, மும்பை, குஜராத், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்கள் ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.