புவனேஸ்வர்:
ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரத்தில் 15வது ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது.
ஹாக்கி உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் உலக கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர், ரூர்கேலாவில் ஆட்டங்கள் நடைபெறும். போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் பெல்ஜியம் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இவை தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஸ்பெயின், இங்கிலாந்து ,வேல்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ள டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று புவனேஸ்வரத்தில் நடைபெறும் முதல் போட்டியில் அர்ஜென்டீனா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ரூர்கேலாவில் இன்றிரவு ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இந்தியாவில் 4 ஆவது முறையாக உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.