ஹிஸ்புல் முஜாஹிதீன்  தளபதி சுட்டுக் கொலை: அமர்நாத் யாத்திரை  ரத்து

Must read

 ஸ்ரீகர்:
ம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன்  தளபதிகளில் ஒருவன் சுட்டு கொல்லப்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தை சேர்ந்த  புர்ஹான் முசாபர் வானி என்பவன் ஹிஸ்புல் முஜாஹிதீன்  என்ற தீவீரவாத இயக்கத்தில் சேர்ந்து  தீவிரவாதியாக மாறியவன். கடந்த 2011ம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களிலும் இவனுக்கு தொடர்பு  உண்டு. சமூக வலைத்தளங்களில்  இந்தியாவுக்கு  எதிரான  விஷம பிரசாரத்தை ஏற்படுத்துவதும்,  காஷ்மீர்  வாலிபர்களின்  மனதை மூளை சலவை செய்து தீவிரவாதியாக மாற்றுவதும் இவனது வேலையாக இருந்தது. இவனை கைது செய்ய மத்திய பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர்.
burhan-55d2c02e99c08_l
ஸ்ரீநகர் அருகே உள்ள பும்டூரா  என்ற  கிராமத்தில் புர்ஹான் முசாபர் வானி  தனது கூட்டாளி களுடன் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஆனால், பாதுகாப்பு படையினரை  உள்ளே  நுழைய விடாமல் அங்குள்ள  மக்கள்  கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முறியடித்து, அதிரடிப் படை வீரர்கள் முன்னேறி  சென்றனர்.
பும்டூரா கிராமத்தின்  நாற்புற  எல்லைகளும்  சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் அங்கு பதுங்கியிருந்த  தீவிரவாதிகள்  பாதுகாப்பு  படையினரை  நோக்கி துப்பாக்கி களால் சுட ஆரம்பித்தனர்.  சிறப்பு அதிரடிப் படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.  சுமார் 4 மணி நேரம்  நீடித்த  இந்த சண்டையில் புர்ஹான் வானி மற்றும்  அவனது  இரு கூட்டாளிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து  ஸ்ரீநகர், புல்வாமா  உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் ஒருபிரிவினர்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் நேற்றிரவு ஊரடங்கு உத்தரவுக்கு இணையான கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலை யில் இருந்து செல்போன், இண்டர்நெட் சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளது.  உள்ளூர்  ரெயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.‘
புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த ஹுரியத் அமைப்பின்  தலைவர்  சையத் அலி ஷா கிலானி  அழைப்பு விடுத்துள்ளார்.
498847-amarnath-yatra14.06.16
இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் உள்ள இந்துக்களின் புனித ஸ்தலமான அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது.  இதையடுத்து   அமர்நாத் யாத்திரை செல்லும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானங்களின் மூலம் தீவிர கண்காணிப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article