தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள செயல் அலுவலர் வேலைக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
”இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III ), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
tnpsc2
செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும்,
செயல் அலுவலர் நிலை – IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும்.
இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf