‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹிந்தி போஸ்டரை வெளியிட்ட படக்குழு….!

Must read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிந்திருந்தது. இந்நிலையில் ஹிந்தியில் மாஸ்டர் படம் வெளியாவதை உறுதி செய்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

More articles

Latest article