சிம்லா

ஞ்சா பயிருடுவதை சட்டமாக்க இமாசல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

போதை பொருள் என கூறப்படும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது. கஞ்சாவின் மூலம் பல மருந்துகள் தயாரிக்க இயலும் என மூலிகை மருத்துவம் தெரிவிக்கிறது. ஆனால் கஞ்சா போதைக்காக மட்டுமே பயிரிடப்படுகிறது. ஆகவே கஞ்சாவை பயிரட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் சட்ட விரோதமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் போதைப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் அத்தைகைய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. இதனால் அரசுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. கடந்த வருடம் உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மருந்துகளுக்காக கஞ்சா பயிரிடுவது சட்ட விரோதம் அல்ல என அறிவிக்கப்பட்டது.

அதை ஒட்டி இமாசலப் பிரதேச மாநில அரசும் கஞ்சா பயிரிடுவது சட்ட விரோதம் அல்ல என அறிவித்தது. இது குறித்து இமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர், “கஞ்சா உள்ளிட்ட பல பயிர்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். அவைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆகவே அவற்றை பயிரிடுவது சட்ட விரோதம் அல்ல என அரசு அறிவிக்கிறது.

இதன் மூலம் அரசுக்கும் விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கஞ்சா போன்ற பொருட்கள் போதைத் தன்மை கொண்டவை. அத்துடன் இமாசலப் பிரதேச மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாகும். ஆகவே அரசு கஞ்சா உற்பத்தியை கண்காணிக்க உள்ளது. மாநிலத்தில் குலு மற்றும் மணாலி ஆகிய இடங்களில் இந்த பயிர்கள் வளர்க்கப்ப்டும்” என தெரிவித்துள்ளார்.