மேட்டுப்பாளையம்
இன்று காலை முதல் மீண்டும் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலாகியது. இதையொட்டி அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க சுற்றுலாத் தலங்கள், ஆலயங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
அவற்றில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலும் ஒன்றாகும். மக்கள் இதில் பயணம் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுவதால் இதில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செல்லும் மலை ரயில் சேவை முறு முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. அதன்படி இன்று காலை இந்த ரயிலின் முதல் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை சுமார் 150 பயணிகளுடன் மலை ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளது.