சென்னை,

றைந்த தமிழக முதல்வரின் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்தார். உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஜெ. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவருக்கு  போயஸ் கார்டன் இல்லம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் மற்றும் ஆந்திராவிலுள்ள திராட்சை தோட்டம் போன்ற ஏராளமான சொத்துக்கள், நகைகள் உள்ளன.

அவருக்கு வாரிசு இல்லாததால், அவரது சொத்துக்கள் மற்றும் உடமைகளை அரசு கைப்பற்றி, நாட்டுடமை ஆக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள்   “தனி நபர் சொத்து தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.” .