சென்னை:

மிழகத்தில் ரூ.91 கோடி மதிப்பில் உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள  கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  நாகை மாவட்டம் சீர்காழியிலுள்ள எம்.ஜி.ஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதுபோல,  திருப்பூர், கோவை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களும் திறந்துவைக்கப்பட்டன.

மேலும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 12.50 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கோளரங்க கருவி, கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

மொத்தம் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களையும் எடப்பாடி  திறந்து வைத்தார்.

சீர்காழி கல்லூரிக்கு ரூ.8 கோடி கட்டிடம்

அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 4655.36 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், கருத்தரங்கக் கூடம், கணினி அறைகள், நூலகம், மாணவர் கூட்டுறவு அங்காடி, கல்லூரி முதல்வர் அறை, துறை தலைவர் அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணியில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரியில் 3 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; சென்னை – காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

சென்னை மாநிலக் கல்லூரியில் 15 கூடுதல் வகுப்பறை கட்டிடம்

சென்னை, மாநிலக் கல்லூரியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; சென்னை நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 4 ஆய்வகக் கட்டடங்கள்; திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள்; வேலூர் மாவட்டம் – வேலூர், முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள், காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

கோவை அரசு கலைக்கல்லுரி

கோயம்புத்தூர் – அரசு கலை கல்லூரியில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்; கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 1 கோடியே 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தெர்மல் பொறியியல் துறைக்கான முதுகலை பாடப் பிரிவுக் கட்டடம்;

சேலம் அரசு கலைக்கல்லுரி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

திருப்பூர் அரசு கலைக்கல்லுரி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்; கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்;

சிதம்பரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வியியல் கட்டடம்;

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள்,

ஒரத்தநாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகக் கட்டடம் மற்றும் கழிப்பறைகள்; கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள்;

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 6 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைத் தொகுதி;

நாகப்பட்டினம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறைகள், 1 கருத்தரங்கக் கூடம், 4 ஆய்வகக் கட்டடங்கள், நூலகக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள்;

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் 3 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; புதுக்கோட்டை, அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறை; புதுக்கோட்டை, அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம்;

திருச்சி

திருச்சி மாவட்டம் திருச்சி அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; துவாக்குடி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்;

நெல்லை, தூத்துக்குடி

திருநெல்வேலி, ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 18 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் பணியாளர்கள் அறைகள்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறைகள்;

என மொத்தம் 90 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து,.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 41 பணியாளர்களில் 7 பேர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.