344 நிலையானக் கலவை (FDC) மருந்துகளை தடைசெய்வதற்கு அவசரம் என்ன???
   – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி:
DRUG
மத்திய அரசு தடாலடியாக 344 மருந்துகளைத் தடை செய்தது குறித்து பத்திரிக்கை.காமில்   “344 மருந்துகள் தடை” மற்றும் ” கொரெக்ஸ் இருமல் மருந்து உட்பட 344 மருந்துகள் தடை”  என்கிறத்  தலைப்புகளில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த அதிரடித் தடையின் பாதகங்கள் குறித்தும்  ” 344 மருந்துத் தடை: நீரிழிவு நோயாளிகள் அவதி” என்கிறத்  தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், இத்தகையத் தடைக்கு என்ன அவசரம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

300 க்கும் மேற்பட்ட நிலையான கலவை மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை அவசரமாகத் தடை செய்த காரணம் என்ன என்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனெரல் (DCGI) அவர்களின் ஒப்புதலை முற்றிலுமாக எப்படி அலட்சியம் செய்யலாம் என்றும் தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அன்று அரசிடம் கேட்டது. மருந்து நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குவதற்கு முன்னர் அவர்கள் சில நிலையான நடைமுறைகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜீவ் சகாய் எண்ட்லா கூறி, இப்பிரச்சினைப் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கோரினார், “உரிமம் வழங்கிய போது நீங்கள் (அரசு) என்னென்ன நிலையான நடைமுறைகளை மேற்கொண்டீர்கள் மற்றும் அதை அவசரமாக இரத்துச் செய்ததற்கு காரணம் என்ன” என்று நீதிமன்றம், 344 நிலையான கலவை மருந்துகளைத் (FDCs)தடை செய்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட 180 க்கும் மேற்பட்ட முறையீடுகளை விசாரித்த போது மத்தியின் வழக்கறிஞரைக் கேட்டது.
drugsinhand
“DCGI யின் ஒப்புதலை முற்றிலும் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? நீங்கள் புறக்கணித்ததற்காக, என்ன மாற்றங்கள் ஏற்பட்டது அதன் பின்னர் (ஒப்புதலுக்குப் பின்னர்) என்று கூற வேண்டும். இல்லையேல் இன்று ஒரு நிபுணர் குழுவும் நாளை மற்றொரு குழுவும் இருக்கும்.” “DCGI ஒப்புதலைப் பெற்ற ஒரு மருந்து இப்போது தடை செய்யப்பட்டதற்கு என்ன நடந்தது என்று உங்கள் (அரசாங்கத்தின்) வாதங்களிலிருந்து எந்த காரணமும் தெரியவில்லை,” என்று நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியது.

கொரெக்ஸ் இருமல் மருந்துக்குக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) சஞ்சய் ஜெயின் தனது பதிலில், மருந்துகள் மற்றும் அழகு சாதனங்களின் சட்டத்தின் கீழ், DCGI கொடுத்த ஒப்புதலைப் புறக்கணித்து ஒரு FDC அல்லது மருந்து தடை செய்யப்பட வேண்டும் என்று அரசு சொல்ல முடியும் என்றார். “சட்டத்தின் 26A பிரிவின் கீழ் (பொது நலன் கருதி மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களின் உற்பத்தியைத் தடை செய்யும் அதிகாரம்) ஒப்புதல் வழங்கியதால், நடவடிக்கை எடுப்பதிலிருந்து அரசை கட்டுப்படுத்திவிட முடியாது. இதற்கு முன்னர் கூட, 90 க்கும் மேற்பட்ட DCGI ஒப்புதல் வழங்கிய மருந்துகள் தடை செய்யப்பட்டன,” என்று நீதிமன்றத்தில் அவர் கூறினார்.