medicines
விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா, கோரக்ஸ் உள்பட 344 வகை மருந்துகளுக்கு தடை

 
குளிர், காய்ச்சல், உடம்புவலி..இப்படி சகலரோக நிவாரணியாய் வலம் வந்த விக்ஸ் ஆக்ஸன் -500  எக்ஸ்ட்ராவும் இருமல் மருந்தான கோரக்ஸூம் இனி மருந்துக்கடைகளில் கிடைக்கப்போவதில்லை. அவை உள்பட அம்மாதிரியான 344 வகை மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டதாலும் சிலவற்றில், பல பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து என்ற மருந்துச் சேர்க்கை கலவையும் இருந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ஃபைஸர் மற்றும் அபோட் நிறுவனங்கள் தங்களுடைய பிரபலமான இருமல் மருந்துகளான கோரக்ஸ் மற்றும் பென்சிடைல் ஆகிய மருந்துகளை நேற்று( மார்ச்-14)  முதல் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.. அரசு தடைசெய்த 344 வகை மருந்துகளில் கோரக்சும் , பென்சிடைலும்  மிகவும் பிரபலமானவையாகும்..
பல பிரச்சினைகளுக்கான சகலரோக நிவாரண மருந்துக் கலவையை ஒற்றை மாத்திரையிலோ அல்லது மருந்திலோ கலந்து வைத்திருப்பதுதான் இம்மருந்துகளின் சிறப்பு. இப்படிப்பட்ட சகலரோக நிவாரணிகள் உலகம் முழுவதும் ஏராளமாய் விற்பனையில் உள்ளது. இந்திய மருத்துவச் சந்தையிலும் தாராளமாய் விற்கப்படுகிறது.  மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசிடம் பெறாமல் மாநில அரசின் சுகாதரத்துறையிடம் பெற்று  சந்தைகளில் விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சுமார் 6ஆயிரம் வகை சேர்க்கை மருந்துகள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் வெறும் மாநில அரசுகளின் ஒப்புதலோடுமட்டும் சந்தையில் வலம் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
 
 
தடைசெய்யப்பட்ட இருமல் வகை மருந்துகளில் கோரக்ஸ் மற்றும் பென்சைடைல் ஆகியவை முக்கியமானவை ஆகும்.பென்சைடைல், அமெரிக்காவின்  மருந்துதயாரிப்பு நிறுவனமான அபோட் ஆய்வக நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய மருத்துவச் சந்தையில் பென்சைடைல் மருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு ஏராளமான வருவாயையும் அந்நிறுவனத்துக்கு பெற்றுத்தந்த்து .
ஃபைஸர் நிறுவனம் கோரக்ஸ் மருந்தினை தயார் செய்து விற்பனை செய்து வந்தது. கோரக்ஸ் போதை மருந்தாகவும் கடத்தல் பொருளாகவும் சிலரால் பயன்படுத்தப்பட்டதால் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு காவல் துறை சீல் வைக்க வேண்டும் என மருந்து தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் கடந்த ஆண்டின் அக்டோபரில் அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாயின.
ஆன்ட்டிபயாடிக் வகை மருந்துகள் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்வது உடல்நலனுக்கு ஆபத்தானது என இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கவலை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிட்த்தக்கது. மிகப்பெரிய அளவில் சந்தையை ஆக்கிரமித்திருந்த  கடுமையான ஆன்ட்டிபயாடிக் சக்தி கொண்ட்து கோரெக்ஸ். இம்மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட்டோ மற்றும் இதுபோன்ற இன்னபிற இந்திய மருந்து தயாரிப்பு நிறுவன்ங்கள் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கடந்த டிசம்பரில் செய்தி வெளியிட்டிருந்த்து.
கோரக்ஸ் மருந்துகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.