கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்வது தவிற்ப்பு

Must read

குமரியில் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடல் தொடர்ந்து சீற்றத்துடனேயே காணப்படுகிறது. வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், குளச்சல், முட்டம், அழிக்கால், குறும்பனை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிற்த்துள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் 1000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article