சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சியின்போது, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் ஒருவரை தட்டிய விவகாரம் சர்ச்சையானது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் அருவருப்பான வகையில் பதிவிட்டிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதுதொடர்பான புகாரில்,  நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை  பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்துள்ளது.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை  அடனறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது  எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் தன்னுடைய பதிவை எஸ்.வி.சேகர் நீக்கிவிட்டதாகவும், மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததால் தன் மீதான  வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு பல முறை அழைப்பு விடுத்தும் எஸ்.வி.சேகர்  ஒரு முறைமுறை கூட ஆஜராக வில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணையை  இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.