நடிகை கங்கனா ரனவத் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதால், கங்கனா வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகை கங்கனா ரனவத் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் கடந்த அக்டோபர் மாதம் கங்கனா ரனவத் மீது மும்பை பாந்த்ரா காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது .
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக புதாபெஸ்ட் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உயர்ச்சி செய்துள்ளார் கங்கனா. அவர் மீது வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட் புதுப்பிக்க இயலாது என கூறியுள்ளார் அலுவலக அதிகாரி .
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த கங்கனா, அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார்.
ஒரு படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடம் நடக்கும், ஒரு வாரம் காத்திருப்பதில் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என கூறி இந்தக் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால், இந்த வார இறுதியில் புதாபெஸ்ட் செல்லும் கங்கனா ரனவத்தின் திட்டம் தள்ளிப் போயுள்ளது.