தாய்லாந்தில் தனது தாயால்  உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை, நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று தாய்லாந்தின் கோரட்  பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின்  6வயது மதிக்கத்தக்க பிங்பாங் என்ற நாய் அவரது தோட்டத்தில் ஒரு இடத்தில் நின்றுகொண்டு ஒரு இடத்தை தனது காலால் தோண்டி, பயங்கரமாக குரைத்தது.

இதையடுத்து, அங்கு வந்த நாயின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர், நாய் தோண்டிய இடத்தில் பச்சிளங்குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்தை கண்டு அதர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை புதைத்தது சும்பாங் மாவட்டத்தை சேர்ந்த 15வயது பெண் என்பதும், அந்த பெண்தான் அந்த குழந்தையின் தாய் என்பதும் தெரிய வந்தது. இந்த இளம் வயதில் தனக்கு குழந்தை பிறந்ததை வீட்டுக்குத் தெரியாமல் மறைக்க குழந்தையை புதைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட குழந்தையை மீட்க பாசக்கார நாயின் நெகிழ்ச்சி செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால், குழந்தையை உயிருடன் மீட்க உதவிய பிங்பாங் (Ping Pong ) நாயின் ஒரு கால் செயல்படாது என்பது வேதனைக்குரியது. இந்த 3 தனது மூன்று கால்களுடனே செயல்பட்டு வருவதாகவும், இதைக்கொண்டு, அந்த விவசாயி கால்நடைகளை மேய்த்து வருவதாகவும் கூறி உள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.