சென்னை

னிமேல் தமிழகத்தில் யானைகளைத் தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள கோவில் யானைகள் பராமரிப்பு குறித்து வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.  இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள்,  வனத்துறை யானைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறித்து அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த யானைகளின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளையும் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அமர்வு உத்தரவு இட்டிருந்தது.  இதற்குத் தமிழக அரசு அளித்த பதிலில் கோவில்கள் கட்டுப்பாட்டில் 32 யானைகள், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடியோ பதிவு பணிகள் நடந்து வருவதால் அவகாசம்  கோரப்பட்டது,.  இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  மேலும் இனிமேல் தமிழகத்தில் தனியார்கள் யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.   வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.