கொரோனா 2-வது அலை இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தனது மக்களவைத் தொகுதியான மதுராவில் ஏழு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.

மேலும் ”மதுரா குடியிருப்புவாசிகளுக்காக ஏழு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மதுரா மாவட்டத்தில் உள்ள ப்ராஜ் கிராம மக்களுக்காக விரைவில் இன்னும் அதிக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளேன். அதேபோல 60 ஆக்சிஜன் படுக்கைகளும் அங்கு நிறுவப்பட உள்ளன’ என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .