சென்னை

குமரி மற்றும் நாகை மாவடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பறையில் 40 மிமீ, கடலாடியில் 30 மிமீ, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 20 மிமீ, திருவாரூர், பாபநாசம் போன்ற பகுதிகளில் தலா 10 மி மீ மழை பெய்துள்ளது.   இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.

குமரி மற்றும் நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று,இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேலும் தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரை சூரைக்காற்று வீசலாம்.  எனவே மீனவர்கள் வரும் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று தினமும் இந்த பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்ப்டுகின்ரன்ர்.

திருச்சி, சேலம், கரூர், தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்ப நிலை 104 டிகிரி வரை செல்லும்.  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கக் கூடும்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் அந்தமான் பகுதியில் குறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக  வாய்ப்பு உள்ளது.  இந்த பகுதியில் வரும் 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.