Skip to content
  • Wed. Jul 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

Sep 11, 2020

சேலம்: மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. நேற்று பெய்த கனத்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  சேலம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் முதல் சேலம் மாநகர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  சத்திரம் பகுதியில் பெய்த மழையால் அம்மா உணவகம் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது. இதனால் அம்மா உணவகம் மூடப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையில்,  புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சேலம் தமிழ்ச்சங்க சாலை, பெரமனூர் நாராயண பிள்ளை வீதி ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சூரமங்கலம் பகுதியில் பலரது வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரெயில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும், ஆத்தூர், கெங்கவல்லி, தேவூர் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post navigation

அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி..
இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை, 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம்பெறும்! தலைமைச்செயலாளர் சண்முகம்

Related Post

தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

உலகம்

உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer