சென்னை:
மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.