ராணிப்பேட்டை:
னமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து, ஆறு மாவட்டங்களுக்கு மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.

தென்மேற்கு அந்தமான் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு குழு சேர்ந்த வீரர்கள் விரைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.