திருவனந்தபுரம்

மேலும்  5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை தொடரும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட்டுள்ளாது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மேலும் 5 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாகத் திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொல்லம், பத்தனந்திட்டா,ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மழையால் திருவனந்தபுரம் மற்றும் பத்தனந்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.