தமிழகத்தில் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

Must read

சென்னை,
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,  தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ந்தேதி முதல்  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலோ அல்லது அதை விட குறைவாகவோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
weather
ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட, வடகிழக்கு பருவமழை 69 சதவீதம் குறைந்துள்ளதாகவும் வானிலை மையம் கடந்த 24ந்தேதி தெரிவித்தது.
தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
weather1
இதுகுறித்து இன்று வானிலை மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும்,
இந்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதால், தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழைக்கும், கடலோர பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
மேலும் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article