சென்னை: சென்னைக்கு அருகில் மேகங்கள் மாறிவிட்டன. கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் இருந்து நாளை மதியம் வரை மிக அதிக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய  மழை  நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேல் முகநூலில் பதிவிட்டிருப்பதாவது,
அனைவருக்கும் காலை வணக்கம், காரைக்கால் – நாகை பெல்ட், மற்றும் கடலூர்-சென்னை பெல்ட்டுக்கு மேகங்கள் இப்போது தெளிவாக்கப் பட்டுள்ளது.  காற்றதழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் தொலைவில் தான் உள்ளது ஆனால் W-NW இயக்கம் எடுத்தவுடன் மேகங்கள், மேற்கத்திய பட்டைகள் கடலூர் – சென்னை – ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் கனமழை மழை பெய்யும்.
சென்னையில் மழை சற்று நேரத்தில் ECR, Kelambakkam, சிறுசேரி பக்கம் முதலில் தொடங்கி பின்னர் கவர் சிட்டி ஒரு வெளி பேண்ட் சென்னைக்கு அருகில் தள்ளப்படும். அலுவலக நேரத்திற்கு பிறகு மழை தொடங்கும். முடிந்தால் சீக்கிரம் வீட்டுக்குச் செல்லுங்கள்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே – தயவுசெய்து பாதுகாப்புக்கு அதிகாரப்பூர்வ வானிலை முகவரியை பின்பற்றவும் மற்றும் அனைத்து அரசு அறிவிப்புகளையும் கண்காணிக்கவும். உங்கள் மொபைல், லேப்டாப் கட்டணம் இன்றிரவு முதல் நாளை மதியம் வரை முழுவதுமாக வைத்திருங்கள் என பதிவிட்டுள்ளார்.

   

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் அதிக அளவில் மேக கூட்டங்கள் சேர்ந்து வருகிறது. இங்கு கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது. காற்றின் குறுக்கு வெட்டு வேகம் குறைவாக உள்ளது. இதனால் தற்போது இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். அதன்பின் இது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதை தொடர்ந்து வடக்கு கடலோர மாவட்டங்களை 11ம் தேதி இந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் அடையும். இந்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் மேக கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் தாழ்வு மண்டலம் கடலோர பகுதிகளை நெருங்க நெருங்க டெல்டாவில் இன்று காலை / மதியத்தில் இருந்து மழை குறையும். இன்னொரு பக்கம் கடலூர் முதல் சென்னை வரை 11ம் தேதி பிற்பகல் வரை பெய்யும்.

வட உள்மாவட்டங்களில் இதனால் நாளை மழை பெய்யும். அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 11ம் தேதி மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.