
சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் முழு போராட்டத்தை ஒட்டி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக – கர்நாடக எல்லையில் கலவரம் நேரிடலாம் என கூறப்படுவதால் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மெலும் தமிழகம் முழுவது சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தமிழக தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கலவரம் நடக்கலாம் என அஞ்சப்படும் இடங்களில் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]