சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியினர் அறிவித்துள்ளபடி இன்று 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை  அண்ணாசாலையில் திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக,  சென்னை ஸ்தம்பித்து போய் உள்ளது.

அண்ணாசாலை சிம்சன் அருகே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் ஸ்டாலின்,   திருநாவுக்கரசர், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் அண்ணாசாலை- வாலாஜா சாலையில் நடக்கும் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளது

அதுபோல அண்ணாசாலையின் ஆங்காங்கே திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்து வருகின்றன.

காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள்  பேருந்துகளை வழி மறித்தும், வாகனங்கள் மீது ஏறியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக  அண்ணாசாலையில்  கடந்த சில  மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.