சென்னை

மிழ்நாட்டில் இன்று முதல் வெயில் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கோடையினால் வெப்பம் கடுமையாகிக் கொண்டு வருகிறது.    இதனால் தமிழக மக்கள் கடும் துயருக்கு உள்ளாகி வருகின்றனர்.   பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி உள்ளது.  இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் முகநூல் பக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “இன்று முதல் இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் வழக்கத்தை விட  குறையும்.  தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.  வரும் வாரத்தில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.    திடீர் மழைக்கும் வாய்ப்புண்டு.

கிழக்குக் கடற்கரை மேலுள்ள மேல் சுழற்சி காற்றினால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.   தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்.   அத்துடன் மலைப்பகுதிகளான திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மலைப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக் கூடும்.

சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும்.  வெப்பம் கட்டுக்குள் இருக்கும்.  இரவு நேர வெப்ப நிலையில் மாருதல் இருக்காது.    நகரின் சில இடங்களில் திடிர் மழை அல்லது தூறல் விழக்கூடும்.” என குறிப்பிடப் பட்டுள்ளது.