சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி ஒட்டுமொத்த் தமிழ்நாடும் போராடி வருகிறது. இதனால் வேறுவழியின்றி தமிழ்த் திரை உலகத்தினரும் போராட்டத்து இன்று கடமைக்கு போராட்டம் நடத்திவிட்டு கலைந்துகொண்டிருக்கின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதலே தமிழ்நாடு தொடர்ந்து போராட்ட களமாகத்தான் இருந்து வருகிறது. தற்போதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராடி வருகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்துவிட்டது மத்திய அரசு. இதனால் தழ்நாடே கொந்தளித்து போராட்டங்களில் இறங்கியுள்ளது.

அரசியலுக்கு வந்துவிட்ட கமல்ஹாசனும், வந்துவிடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். ஆனால் தங்களது படங்களுக்கு கர்நாடகாவில் பாதிப்பு வந்துவிடுமோ என பெரும்பாலான நடிகர்கள் மவுனம் சாதித்தனர். இதனால் அவர்கள் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இதனால் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று அறிவித்தனர். அதாவது மவுன அறவழி போராட்டம் என்று அறிவித்து இன்று நடத்தி முடித்தனர்.

ஆனால் இது ‘அரட்டை கச்சேரியாக நடந்த 4 மணி நேர போராட்டம்” என்று விமர்சனம் எழுந்துள்ளது.

“இந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசினால், அதனால் கர்நாடகாவில் தங்கள் படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்படுமோ என்பதற்காகத்தான் மவுன அறவழி போராட்டத்தை அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு வந்து அமர்ந்ந்த பெரும்பாலான நடிகர்கள் ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல கேஷூவலாக அமர்ந்திருந்தனர். சிலர் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். வேறு சிலர் தங்கள் முகத்தை தொலைக்காட்சியில் காட்டிவிடுவார்களோ என பயந்து பிறர் முதுக்குக்குப் பின்னால் பயந்து பதுங்கிக் கொண்டனர்.

பிறகு மிக துல்லியமாக பகல் 1 மணிக்கு மவுன அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மத்திய சாப்பாட்டுக்கு சென்றுவிட்டனர்.

இதெல்லாம் ஒரு போராட்டமா” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும், “திரைப்படங்களில் மட்டும் வீரவசனம் பேசி, வில்லனை பந்தாடுவார்கள். நிஜத்தில் ஸ்டெரிலைட்ஓனரை பகைத்துக்கொள்ள முடியாது. நாளைக்கே அவர் திரைத்துறையில் இறங்கி படங்கள் தயாரிக்கலாம்.

அதே போல காவிரி விவகாரத்தில் கன்னடர்களின் அகம்பாவத்தை விமர்சித்துவிடக்கூடாது. அப்படி செய்தால் கர்நாடகத்தில் தங்கள் படத்தை வெளியிட முடியாது.

ஆகவே, அதிரடி நாயகர்கள் எல்லாம் சேர்ந்து, “மவுன அறவழி போராட்டம்” நான்கு மணி நேரம் நடத்தி கலைந்திருக்கிறார்கள்.

இவர்களைச் சொல்லி பலனில்லை. இவர்கள் பின் அலையும்   ரசிகர்கள் திருந்தவேண்டும்” என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.