டெல்லி: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.

2023 மார்ச் மாதம் பிரதமர், சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பாக இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார். அப்போது,  “ஒரே உலகம், ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற தொலைநோக்குச் சிந்தனையை நாம் உலகிற்கு உணர்த்தி இருப்பதாகவும், மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்து படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது இது என்றார்.

மேலும்,  குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது நமது அரசின் முதன்மையான முக்கியத்துவமாகும்” “ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகத் திட்டங்கள், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது” “பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் புதிய மருத்துவமனைகளை மட்டும் உருவாக்காமல், புதிய முழுமையான சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது என்றவர்,

“சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் கவனம் செலுத்துவது தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்பாகும் மற்றும் நமது முயற்சிகளை உலகளாவிய சுகாதாரத் துறையில் கவனம் செலுத்த செய்யும்”,  “மருந்து உற்பத்தித் துறையின் இன்றைய சந்தைய மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாயாகும். தனியார் மற்றும் கல்வித் துறையினர் இடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் இதன் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மாநிலங்களில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் அதை மேம்படுத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நாளை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு சார்பில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது