முதல்வர் உடல்நலம் பெற்று, மக்களுடன் தீபாவளியை கொண்டாட குஷ்பு விருப்பம்!

Must read

சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான  குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது, முதல்வர் உடல்நலம் பெற்று மக்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாட தாம் விரும்புவதாக குஷ்பு கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
kusbhu2
முதல்வரை அனைத்து கட்சி தலைவர்கள் உள்பட பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மனைவி, அதானி குரூப் சார்பாக அவரது மகன் உள்ளிட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டில்லியில் இருந்து திடீரென அப்பல்லோ வந்து முதல்வர் உடல்நலம் விசாரித்து சென்றார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா உள்பட வடநாட்டு தலைவர்களும் சென்னை வந்து முதல்வர் உடல்நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தமிழ் திரைப்பட நடிகையுமான குஷ்பு, இன்று அப்பல்லோ மருத்துவவமனைக்கு வருகை தந்தார்.
மருத்துவமனைக்குள் சென்ற குஷ்பு, அங்கிருந்த அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பூரண குணமடைந்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அவர் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன். முதல்வர் விரைவில் நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article