டெல்லி: பண்டிகை காலங்கள் தொடங்கி விட்டது. அதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்கவேண்டும் என பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தால், தினசரி பாதிப்பு 20ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை ஏறி இறங்கி பதிவாகி வருகிறது. அதிகபட்ச பாதிப்பு கேரளாவில் பதிவானாலும், அங்கு அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. 90 சதவிகிதத்திற்கும் மேல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழ்கத்தில் இன்னும் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்டவில்லை. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இந்த நிலையில், பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்,

இந்தியாவில் பண்டிகைக்காலம் கோலாகலமாக தொடங்கிவிட்டது. நவராத்திரி கொண்டாட்டங்களுடன் தீபாவளி திருவிழாவும் தொடங்கிவிட்டது. அதனால், மக்கள்  ‘அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’

பண்டிகைகாலத்துக்கு பண்டங்கள் வாங்கும்போது, முதலில் முகக்கவசத்தை வாங்குங்கள்.

“துர்கா பூஜை மற்றும் தசரா போன்ற பண்டிகைகளில் மெய்நிகராக (virtually) கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் அன்புக்குரியவர்களை தீபாவளியன்று ஆன்லைனில் சந்தியுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மாநில அரசுகளும்   அக்டோபர் முதல் டிசம்பர் வரை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்  இந்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.