சென்னை:  பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை கொடியசைத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு  ஊர்தியைகொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதனப்டி  மருத்துவக் குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது.  தேர்வு அச்சம், மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.