ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமைக்காவலர் கைது

ஈரோடு:

டும் ரயிலில் மது போதையில் இருந்த தலைமைக்காவலர்,  எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள ஓதியம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றுபவர்  ஜெகன். வயது 42.

இவர் நேற்று, சென்னை செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் பயணித்தார். அப்போது அவர் மது போதையில் இருந்தார்.

அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த எட்டுவயதான வடநாட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதை சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். அவர்கள், பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரயில், ஈரோடு நிலையத்தில் நின்றதும் காவலர் ஜெகன் மீது ரயில்வே போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்த ஜெகன் மீது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த்தாக வழக்கு பதியப்பட்டது.

சமூக விரோதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவலரே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Head constable arrested for giving sex torture to a girl in running train, ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமைக்காவலர் கைது