கேரளா : மதுக்கடைகளில் பெண்களை பணியமர்த்த நீதிமன்றம் உத்தரவு!

Must read

திருவனந்தபுரம்

கேரள மதுக்கடைகளில் பெண்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் மதுபான வாரியம் என்னும் அரசு அமைப்பு மது பானக் கடைகள் நடத்தி வருகின்றது.   இது நமது தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் போன்றதாகும்.   இந்த அமைப்பில் ஏற்கனவே நிர்வாகப் பதவிகளில் பென்கள் பணியில் உள்ளனர்.  அதைச் சுட்டிக்காட்டி மதுக்கடைகளிலும் பெண்களை பணியில் அமர்த்த வேண்டும் என சில பெண்கள் உரிமை அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த கேரளா உச்ச நீதிமன்றம் அலுவலகப் பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளது போல கடைகளிலும் பெண்களை பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.   இந்த உத்தரவின்படி விரைவில் பெண்கள் கேரள மதுக்கடைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிகிறது.

More articles

Latest article