சென்னை

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.    இது குறித்து விசாரிக்க சந்தானம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.  குழுவின் விசாரணையில் தெரிந்த விவரங்களின் அடிப்படையில் பேராசிரியர் முருகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு ஒன்றை வழக்கறிஞர் மணி என்பவர் சென்னை நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.   எற்கனவே இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.   அதனால் உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.