சென்னை: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராயபுரம் தொகுதி மக்களிடம்,  என்னை கை விட்டுட்டீங்களே..  என  அதிமுக முன்னாள் ஜெயக்குமார் புலம்பியுள்ளார்.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் உள்பட இன்னும் பத்து தேர்தலில் நின்றாலும் ராயப்புரத்தில் தான் போட்டியிடுவேன் என்று  உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தேர்தலையொட்டி,  அதிமுக  சார்பில், கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,  இரண்டாவது  கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதற்கிடையே, அதிமுக நிர்வாகிகள், தங்களது தொகுதிகளுக்கு சென்ற முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், அதிமுகவை சார்ந்த பிரமுகர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராயபுரத்தில் அதிமுக பிரமுகர்கள் மத்தியில் பேசிய ஜெயக்குமார், கடந்த தேர்தலில் என்னை கை விட்டுட்டீங்களே.. !  அரசியலை விட்டே விலகி விடுவேன் என வருததமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வட சென்னையை சேர்ந்தவர். பல தேர்தலில்  ராயப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஆனால், கடந்த தேர்தலில்,  தோல்வியை தழுவினார். இதனிடையில் தற்போது  அவர் தொகுதி மாற்றப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில்,  அதிமுக தொண்டர்கள் மத்தியில்  பேசிய ஜெயக்குமார், தான் ஒருபோதும் தொகுதி மாற மாட்டேன், ராயபுரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று கூறியதுடன், கடந்த முறை தேர்தலில் தோல்வியடைந்தது பற்றி புலம்பியுள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட என்னை 2001 ல ஜெயிக்க வைச்சீங்க. அதுக்கப்புறம் 2006, 2011 தேர்தல்ல ஜெயிக்க வைச்சீங்க. ஆனால் 2021 தேர்தல்ல கை விட்டுட்டுங்களே. நான் என்ன தப்பு செஞ்சேன் சொல்லுங்க. ஊரை அடிச்சு உலைல போட்டுட்டேனா. கட்டப்பஞ்சாயத்து பண்ணேனா? இல்லைன்னா கள்ளச்சாராயம் காய்ச்சுனேனா. ரவுடித்தனம் செஞ்சேனா? மாமூல் கேட்டேனா. இல்லை அடாவடித்தனம் செஞ்சு. பொறுக்கித்தனம் பண்ணேனா. சொல்லுங்க பார்க்கலாம். யாராவது அப்படி நான் செஞ்சுன்னு சொல்லுங்க பார்க்கலாம். அரசியலை விட்டே போயிறேன்.

அப்படியெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கிடையாது. உங்களை சுத்தி சுத்தி தான் நான் வந்தேன். இன்னும் பத்து எலெக்ஷன் நிப்பேன். அதுவும் ராயப்புரத்துல தான் நிப்பேன். நான் போய் பொதுச்செயலாளர் கிட்ட கேட்டேனா கும்மிடிப்பூண்டில நிக்கலாம். இல்லைன்னா சென்னைல ஏதாவது ஒரு தொகுதில போய் நிக்கலாம். மயிலாப்பூர் மயிலாப்பூர்ன்னு கூட சொன்னாங்க. எனக்கு இருக்கே ஒரே சொந்த ஊர் அப்படின்னா ராயப்புரம் தான். அங்கதான் நான் நிப்பேன்” என உறுதியாக பேசிள்ளார்.
இதனிடையில் சமீபத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஜெயக்குமார் பேசியது பரபரப்புகளை கிளப்பியது. அதிமுகவை ஊழல் கட்சி என தவெக தலைவர் விமர்சித்து பேசியதற்கு பதிலளித்தவர், எங்களை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய் கருப்பா எவ்வளவு பணம் வாங்குறாரு, வெள்ளையா எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு அவர் மேல இன்கம்டாக்ஸ் வழக்கும் இருக்கு. அதிமுகவை விஜய் தொட்டால் கெட்டார் என கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தார். அதோடு தவெகவிற்கு வழங்கப்பட்ட சின்னத்தையும் கிண்டல் செய்து பேசினார். ஆபத்துல இருக்கிறவங்க தான் விசில் அடிச்சு உதவி கேட்பாங்க என தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியிருந்தது.

[youtube-feed feed=1]