தஞ்சாவூர்:

ணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, இன்னும் 4 நாட்கள் பரோல் உள்ள நிலையில் இன்று பெங்களூர் சிறைக்கு திரும்ப இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன், கடந்த 20-ந் தேதி சென்னை யில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தைர். இதையடுத்து, 15 நாட்கள் பரோல் காரணமாக கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா தஞ்சாவூர் வந்தார்.

நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், தனது பரோலை முன் கூட்டியே முடித்துக்கொண்டு அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது நடராஜனுக்கு சொந்தமான விளார் கிராம வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா குடும்ப பிரச்சினை, சொத்துப் பிரச்சினை காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சையும் மேற் கொண்டார்.

இந்நிலையில், குடும்பத்தினரிடம் நிலவி வரும் அதிகார போட்டிகள் காரணமாக மீண்டும் நிம்மதி இழந்த சசிகலா, வீட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பதே  நிம்மதியாக இருந்தது என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோல் ஏப்ரல் 3ந்தேதிதான் முடிவடைய உள்ள நிலையில், முன்கூட்டியே பெங்களூர் சிறைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.

இன்று காலை அவர் தஞ்சையில் இருந்து கார் மூலம் பெங்களூர் புறப்பட இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் தெரிகிறது.