சண்டிகர்:

ரியானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்,  90 தொகுதிகளுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் உள்பட மொத்தம் 1168 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

90 சட்மன்ற தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில், வரும் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு வேட்புமனுத் தாக்கல் கடந்த 7ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இறுதியாக, 1,168 போட்டியாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய,  இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்தர் ஜித், “தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் சில வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ் பெற்றதையடுத்து, அரியானாவில் 90 சட்டசபை இடங்களுக்கு மொத்தம் 1,168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்”  என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்களை  தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

அதன்படி,  அம்பாலா மாவட்டத்தில் 36 வேட்பாளர்கள், ஜஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர், கைதலில் இருந்து 57 பேர், சிர்சாவைச் சேர்ந்தவர்கள் 44 பேர், சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 66 பேர், ஹிசாரிலிருந்து 118 பேர், யமுனநகர் மாவட்டத்தில் 46 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மகேந்தர்கர் 45, சர்கி தாத்ரி 27, ரேவாரி 41, ஜிந்த் 63, பஞ்ச்குலா 24, ஃபதேஹாபாத் 50, ரோஹ்தக் 58, பானிபட் 40, மேவாட் 35, சோனிபட் 72″ என்று இந்தர் ஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஃபரிதாபாத் மாவட்டத்தில் இருந்து 69 வேட்பாளர்கள், பிவானியைச் சேர்ந்த 71 பேர், கர்ணலைச் சேர்ந்தவர்கள் 59 பேர், குருகிராமிலிருந்து 54 பேர் மற்றும் பல்வாலில் இருந்து 35 பேர் போட்டியிட உள்ளனர்.

அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.