அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு

Must read

சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை தடுக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறி உள்ளதாவது:

அரியானா மாநிலத்தின் கைத்தல், பானிப்பட்டு, ஹிசார், ஜீந்த், ரோஹ்டக், சர்கி தாத்ரி, சோனிபட் ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை செல்போன் வசதிகளை தவிர இணைய சேவை துண்டிக்கப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் செல்போன் இணைய சேவையுடன் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article