ஹொடல்,  அரியானா

ரியானா முதல்வர் மனோகர்லாலை பதவி இறக்கும் வரை ஓயமாட்டேன் என முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடா கூறி உள்ளார்.

இந்த மாதம் 15ஆம் தேதி பாஜக சார்பில் ஒரு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.    அதில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் வரும் வருடம் நடக்க உள்ள தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.   அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் அணி சார்பில் தேர்தல் பரப்புரையை முன்னாள் முதல்வர் புபேந்திர சிங் ஹூடா தொடங்கி உள்ளார்.

அவர் வரவுள்ள தேர்தலை முன்னிட்டு தனது ஆறு மாத யாத்திரையை தொடங்கினார்.   அப்போது அவர், “நான் மனோகர் லால் அரசு பதவியில் இருந்து இறங்கும் வரை சும்மா இருக்க மாட்டேன்.  விரைவில் அரசை பதவி இறங்கச் செய்வேன்.” எனக் கூறி உள்ளார்.   இந்த யாத்திரை தொடக்க விழாவில் ரோடாக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வரின் மகனுமான தீபேந்தர் சிங் ஹூடாவும் கலந்துக் கொண்டார்.

தீபேந்தர் சிங், “முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங்,  இந்த ஆரு மாத காலத்தில் இந்த யாத்திரை மூலம் மாநிலம் முழுவதும் பயணம் செய்ய உள்ளார்.   ஆறுமாதம் முன்பு அவருடைய காலில் ஒரு பெரிய இரும்பு விழுந்து அடிப்பட்டுள்ளது.     இருப்பினும் அவர் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.    அவர் தனது யாத்திரையின் போது மனோகர்லால் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துச் சொல்ல உள்ளார்’  எனக் கூறினார்.

[youtube-feed feed=1]