அரியானா,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட அரியானா பாரதிய ஜனதா தலைவரின் மகன்மீது ஜாமினில் வெளி வரமுடியாத பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து  ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் வர்னிகா என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட இருவரும் உடடினயாக ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 4, 5 இரவில் இந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் மதுபோதையில் இருந்தாகவும், ஐஏஎஸ் அதிகாரியன் மகளிடமே  பாலியல் சேட்டை செய்ததாகவும், அவளை கடத்த முயன்றதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, . ஆகஸ்ட் 9 ந்தேதி அவர்கள்  கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலில் இருந்தனர்.

இருவர்மீதும் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் இருவரும் பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் மேலிட்டத்தின் பிரஷர் காரணமாக  அவர்கள்மீது சாதாரண பிரிவின்கீழே வழக்கு பதியப்பட்டது.

இது நாடு முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவருடன் வர்னிகா இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று பாரதியஜனதாவினரல் சமூகவலைதளங்கலில் பதிவேற்றப்பட்டு வைரலாகியது.  இது மேலும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்நிலையில் தற்போது   குற்றவாளிகள் இருவர்மீதும் ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய  குற்றவியல் சட்டம் 365ன் படி ஆள் கடத்தல் வழக்கு மற்றும் செக்சன் 511ன்படி  கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.