மஞ்ச ஜெர்சில… விசிலுக்கு நடுவுல… விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”: ஹர்பஜன் தமிழ் டுவிட்

Must read

சென்னை:

ந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக களமிறங்க உள்ள பிரபல கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், தமிழில் டுவிட் போட்டு சென்னை ரசிகர்களின் ஆதரவை திரட்டி உள்ளார்.

நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது” தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

என்று தனது டுவிட்டரில பதிவிட்டு உள்ளார்.

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங், சமீப காலமாக இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், ஐபிஎல் ஏலத்தின்போது, ரூ.2 கோடிக்கு ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் 7ந்தேதி ஐபிஎல்-ன் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் டுவிட்டர் பதிவு தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது சென்னையில் தோனி, ஹர்பஜன்சிங் உள்பட சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில்  ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article