தண்டனையில் மிகுந்த மகிழ்ச்சி: தெலுங்கானா காவல்துறைக்கு நிர்பயாவின் தாய் பாராட்டு!

Must read

புதுடில்லி: கடந்த 2012 ஆம் ஆண்டு மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு பலியான நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகியவற்றில் ஒரே இரவில் நிகழ்ந்த முன்னேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் தான் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறினார்.

“தெலுங்கானா காவல்துறை ஒரு மிகப் பெரிய காரியத்தை செய்துள்ளது. ஒரு மகளுக்காவது நீதி கிடைத்துள்ளது. காவல்துறை ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆஷா தேவி கூறியுள்ளார்.

கடந்த 12 டிசம்பர் 2012 அன்று டில்லியின் தென்பகுதியில் ஓடும் பஸ்ஸுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தனது ஆண் நண்பருடன் சாலையில் தூக்கி எறியப்பட்ட 23 வயது துணை மருத்துவ மாணவியான தனது மகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் மற்றும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் அவர் மாநில மற்றும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“நான் கடந்த ஏழு ஆண்டுகளாக நீதி வேண்டி தூணுக்கும் கம்பத்திற்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த நாட்டின் நீதி அமைப்பையும் அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன், நிர்பயாவின் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

 

 

More articles

Latest article