சென்னை,

ன்று தி.மு.க. கூட்டிய கூட்டத்தில் திருமாவளவன் – கம்யூ. கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

அண்ணா அறிவாலயத்தில் தமிழக விவசாயிகளுக்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்த கூட்டத்தில் பிரதான கட்சிகள் தவிர்த்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும்  திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தி.மு.க. கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும், 25-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தை விளக்கி 22-ந்தேதி அனைத்து கட்சி கூட்டமும் நடக்கிறது.

இது விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட கூட்டமே தவிர அரசியல் ரீதியான கூட்டம் இல்லை.

விவசாயிகளின் பிரச்சினைக்காக டில்லி சென்று பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சி தலைவர்களும் திட்டமிட்டுள்ளோம். அப்போது விவசாய பிரதிநிதிகளையும் அழைத்துச் செல்வோம். விவசாயிகளுக்காக 5 நிமிடம் நேரம் ஒதுக்கி பிரதமர் சந்திக்க வேண்டும்.

தமிழக அரசின் சார்பிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டில்லி சென்று பிரதமரை சந்தித்து பேச வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வு, தமிழக அரசுக்கும் உள்ளது. இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.