சென்னை: சென்னை அண்ணா சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் காரணமாக, ராயப்பேட்டை, அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதுபோல ராயப்பேட்டை, ஜி.பி.,சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வியாழக்கிழமைகளில் மைலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாசாலை, ராயப்பேட்டை ஜி.பி. சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆக.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள், இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்படும்.
இந்த வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இந்த வாகனங்கள் ஜி.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.
இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்குச் செல்லலாம். ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்கு அனுமதிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாகச் செல்ல அனுமதி கிடையாது.
இந்த வாகனங்கள் இடது பக்கம் திரும்பி ஸ்பென்சா் சந்திப்பில் ‘யு’ திருப்பம் செய்து, அண்ணா சாலை, டேம்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.
அண்ணா சாலை – வாலாஜா சந்திப்பு – அண்ணா சிலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக செல்லலாம்.
ஸ்பென்சா் சந்திப்பில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி வரும் வாகனங்கள், டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை வழியாகச் சென்று ஜி.பி. சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல ராயப்பேட்டை, ஜி.பி.,சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெஸ்ட் காட் சாலை, ஜி.பி.,சாலை வழியாக பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. மாறாக, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலை செல்லலாம். இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி.பி.,சாலை வழியாக செல்லலாம்.
அண்ணாசாலையில் இருந்து ராயப்பேட்டைக்கு ஜி.பி.,சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அண்ணாசாலை – ஜி.பி.,சாலை சந்திப்பில் வாகனங்கள் ‘யு டர்ன்’ செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக அவ்வாகனங்கள் ஸ்பென்சர் சிக்னலில் யு டர்ன் செய்து செல்லலாம்.
ஸ்பென்சரில் இருந்து செல்லும் வாகனங்கள், ஜி.பி.,சாலைக்கு செல்ல, டேம்ஸ் சாலை – ப்ளாக்கர்ஸ் சாலை வழியாக சென்று ஜி.பி.,சாலையை அடையலாம்.
மயிலாப்பூர் மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் அமைந்தள்ள சாய்பாபா கோவிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வியாழக்கிழமைகளில் மட்டும் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.
சாரதாபுரம் சாலை, டாக்டர் ரங்கா சாலை மற்றும் கிழக்கு அபிராமபுரம் சாலையில் இருந்து சாய்பாபா கோவிலுக்கு வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் சாலை வழியாக செல்ல அனுமதியில்லை. அவை, வி.சி.,கார்டன், 1வது தெரு வழியாக திரும்பி, செயின்ட் மேரிஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.
அலமேலுமங்காபுரம், அக்ரஹாரம் லேன் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் சாலை வழியாக ஆர்.கே.மடம் சாலை செல்ல அனுமதி இல்லை. மாறாக, சாரதாபுரம் சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.