சபாஷ்: பள்ளி செல்லாத குழந்தைகளை, மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய காவல்துறை!

Must read

சென்னை,

ள்ளி செல்லாத குழந்தைகளை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பி சேவை செய்துள்ளனர் சென்னை காவல்துறையினர்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் அருகே உள்ளது கண்ணகி நகர். சென்னையின் மைய பகுதியில் உள்ள குடிசைவாசிகள் மற்றும், ரோட்டரங்களில் இருப்பவர்களுக்காக கண்ணகி நகரில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டு வந்தனர்.

ஆனால், இந்த பகுதியில் பள்ளிக்கூட வசதி இல்லை என்று கூறப்பட்டது. அதன் காரணமாக‘ இந்த பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி வந்தனர். ஒருசிலர் அந்த பகுதிகளில் உள்ள ஏதாவது கம்பெனிகளில் வேலைக்கு சென்று வந்தனர்.

இதையறிந்த அந்த பகுதி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். பள்ளிக்குச் செல்லாத 400க்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்ணகி நகர் காவல் துறையை சேர்ந்த காவலர்கள் கண்டுபிடித்து, அவர்களை அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவி புரிந்தனர்.

காவலர்களின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுபோல தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பகுதி காவல்துறையினரும் செயல்பட்டால், தமிழகம் விரைவில் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

More articles

Latest article