சென்னை:

சென்னைியில் இருந்து கன்னியா குமரி வரை கடலோர இருப்புப்பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சென்னை – கன்னியாகுமரி இடையே கடலோர இருப்பு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மத்திய அரசால் மட்டும் இந்த பாதை அமைக்க முடியாது.

இதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். வேளச்சேரி – பரங்கிமலை ரயில்பாதை பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும்” என்று சுரேஷ்குமார் பேசினார்.

அதே கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் கருத்துரு வந்த பின்னர், இது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.