சென்னை: மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள நோயாளிகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக பதவி ஏற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மத்தியஅரசு கொடுத்து வந்த தொடர் அழுத்தம் காரணமாக, தற்போது,  தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னிலிருந்து 650 மெட்ரிக் டன்னாக மத்தியஅரசு அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் வழங்குவதில் மத்தியஅரசு  பாரபட்சம் காட்டியது. முதலில், 146மெட்ரிக் டன் வழங்கிய நிலையில், பின்னர் அது  220 மெட்ரிக் டன்னா உயர்த்தி ஒதுக்கியது.

இதற்கிடையில் தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுடன் நேரடியாக பேசியதுடன், திமுக நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர்களுடன் பேசச் செய்தார். தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு  419 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் அது 519 மெட்ரிக் ஆகவும் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன் என்று திருத்தப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு திருத்தத்தின் மூலம், மகாராஷ்டிராவின் டோல்வி நகரில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூவிடம் இருந்து 60 மெட்ரிக் டன் ஆக்சிஜன், முறையே ரூர்கேலா மற்றும் கலிங்க நகரில் உள்ள லிண்டேவிலிருந்து 46 மெட்ரிக் மற்றும் 50 மெட்ரிக் டன்., (ஒடிசா இரண்டும்) மற்றும் 50 மெட்ரிக் டன். இது மாநிலத்தின் தூத்துக்குடியில் மீண்டும் திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் செப்பு ஆலையிலிருந்து 25 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

மேலும் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிங்கப்பூரிலிருந்து கடல் வழியாக விசாகப்பட்டினத்தை அடைந்து சாலை வழியாக தமிழகத்திற்கும் கிடைக்கும்  என்றும்  சுகாதார செயலாளர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு ரயில்மூலம் ஒடிசா கலிங்கநகர்  பகுதியில் இருந்து ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக, ஆக்சிஜன் கொண்டுவருவது தடைபட்டால்,   ஜாம்ஷெட்பூர் வழியாக, ரயில் வழியாக ஆக்ஸிஜனைக் கொண்டுவருவதற்கான மாற்றுத் திட்டம் எங்களிடம் உள்ளது, இதற்காக நாங்கள் ரயில்வே அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

தமிழகத்திற்கு 146டன் ஆக்சிஜன் வழங்கிகொண்டிருந்த ஒடிசா மாநிலம், தற்போது புயலை சந்திப்பதால் ஆக்சிஜன் ஆலைகள் பாதிப்பை சந்திக்கும் என்று முன்னரே யோசித்து, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்த ஆக்சிஜன் வரவழைக்க துரித நடவடிக்கைகளை தமிழக அரசு சார்பில் தொழிற்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்டது. மேலும் சிங்கப்பூர், தைவானில் இருந்தும் ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டது.
அதுபோல, அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை சமாளிக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும்  மாநிலம் முழுவதும அதிக அளவில் கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்களை அதிரடியாக உருவாக்கி, கொரோனா நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிப்பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு தீவிரம் காட்டியது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்களியே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடுமையான காலக்கட்டத்தில், முதல்வருக்கு உதவியாக  இருந்து, தமிழக அரசின் போர்ப்படை தளபதிகளாக,  பம்பரமாக சுழன்று  பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் குழுவினருக்கு  பத்திரிகை டாட் காம் இணையதளம் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது.